
posted 29th January 2022
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயிலும் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்களுக்கும் விரிவுரையாளர் ஒருவருக்கும் தொற்று நிலைமை ஏற்பட்டமையைத் தொடர்ந்து கலாசாலையின் நேரடிக் கற்றல் செயற்பாடுகளை ஒரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு மத்திய கல்வி அமைச்சுச் செயலாளர் கலாசாலை அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கலாசாலையின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகிய நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 ஆசிரிய மாணவர்கள் கலாசாலைக்கு வருகை தந்தனர். அவர்களில் ஒருவர் திடீரெனச் சுகவீனமுற்றமையைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் கொரோனா தொற்றைக் கொண்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வந்த நாள்களில் ஆசிரிய மாணவர்களில் கோவிட் அறிகுறிகள் தென்பட்டவர்கள் தாமாகவே வைத்தியசாலை சென்று மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது முந்நூறு வரையான ஆசிரிய மாணவர்கள் கற்கும் சூழலில் வகுப்பறை நேரடிக் கற்றல் செயற்பாடுகளின் ஊடாகக் கோவிட் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி 06 ஆம் திகதி வரை கலாசாலையின் நேரடிக் கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறும் இணையவழியில் போதனைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சுச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House