
posted 22nd February 2022
கோவிட்டினால் அதிகரிக்கும் இறப்புவீதம்
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 024 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நேற்று 16,000 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண வாரியாக கொரோணா அப்டேற்
கிளிநொச்சியில் ஒரு வயது பெண் குழந்தை, வெளிநாடு செல்ல முற்பட்ட ஒருவர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று திங்கட்கிழமை 106 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதனடிப்படையில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 06 பேர்
யாழ். போதனா வைத்தியசாலையில் - 05 பேருக்கு (வெளிநாடு செல்ல முற்பட்ட ஒருவர் உட்பட)
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர் (ஒரு வயது பெண் குழந்தை உட்பட)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்
இவ்வாறு வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் கைது
சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி, யாசகம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும், யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.
அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பருத்தித்துறை மீனவர்களிடம் இருந்து இந்திய மீனவர்களை மீட்ட கடற்படை அவர்களை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
21 மீனவர்களையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதாவன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 மீனவர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House