
posted 19th January 2022
ஆட்டுக்கு குழை வெட்டச் சென்ற சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(18) மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் கஜனிகா (வயது- 16) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக மேற்படி சிறுமி சென்றதாகவும் அவர் கிணற்றங் கட்டில் ஏறி நின்று குழை வெட்டிய போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House