
posted 26th January 2022
காரைநகா் பிரதேச சபையின் உப - தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் உறுப்பினா் ஆண்டிஐயா விஜயராசா இன்று புதன்கிழமை ஏகமனதாக தொிவு செய்யப்பட்டாா்.
வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளா் ம. பற்றிக் டிறைஞ்சன் தலைமையில் இடம்பெற்ற உப- தவிசாளா் தொிவிலேயே பிரதேச சபைியின் உறுப்பினராக கடமையாற்றும் ஆ. விஜயராசா தொிவு செய்யப்பட்டாா்.
இதில் சுயேட்சைக்குழு உறுப்பினா் 3 போ், தமிழ்தேசிய மக்கள் முன்னனி உறுப்பினா் ஒருவா், தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா் 2 போ் உட்பட மொத்தம் 6 போ் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஆண்டிஐயைா விஜயராசாவுக்கு போட்டியின்றி சாதகமாக வாக்களித்தனா்.
ஈபிடிபி உறுப்பினா் 2 போ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினா் 2 போ் உட்பட மொத்தம் 4 போ் சபைக்கு சமூகமளிக்கவிலலை.
உப- தவிசாளருக்கான தொிவை கை. நாகராசா முன்மொழிய ப.தவமணி வழிமொழிந்தாா்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House