
posted 2nd January 2022
கவிஞர் வேலணையூர் சுரேஷ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.
மானிடப் பேரிடல் (கொரோனா காலப் பதிவுகள்), குறும்புப்பா – 100 ஆகிய நூல்களே வெளியிடப்பட்டன.
படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட்டவர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மூத்த படைப்பாளரும் மிகச் சிறந்த எழுத்தாளருமான நா. யோகேந்திரநாதனால் இரு நூல்களையும் வெளியிட கலாசார உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு ஊடகவியலாளர் இளங்கீரன் தலைமை தாங்கினார்.
அறிமுக நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சிறப்புற நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House