
posted 13th January 2022
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
சுகாதாரத்திணைக்கள டெங்கு ஒழிப்புப் பிரிவினால், டெங்கு பரவும் சிகப்பு பட்டிலுக்கு உட்பட்ட கல்முனைப் பிராந்தியத்தில் தற்போதய மழையுடன் கூடிய கால நிலையால் டெங்கு நுளம்புகள் பெருகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் டெங்கு பரவும் பிரதேசங்களாக சில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பரிவுகள் இனம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இதனையடுத்து பிராந்தியத்திலுள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்மும்முரமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் வண்ணம் தமது வீடுகள், சுற்றுச் சூழல்களை வைத்திருக்காது மிகப் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறும்,
சுற்றுச்சூழலையும், ஏனைய இடங்களையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்குமாறும், தவறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் டாக்டர். சுகுணன் எச்சரித்துள்ளார்.
இதேவேளை உள்ளுராட்சி சபையான நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் பிரதேச மட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தது.
இதன்போது கடற்கரைப்பிரதேசங்களுட்பட வெளவாலோடை போன்ற பிரதேசங்களை சுத்தப்படுத்தி, திண்மக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,
வீடுவீடாகச் சென்று திண்மக்கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான பைகளும் வழங்கப்பட்டன.
இதன் போது நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம்.றயீஸ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களும் முக்கிய பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House