
posted 20th January 2022
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் புதிய பிராந்திய பணிப்பாளராக டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் பதவிப் பொறுப்பேற்றுள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த டாகடர். றிபாஸ் கடந்த புதன் கிழமை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த மூன்று வருட காலமாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றிய டாக்டர். ஜீ.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றம் வழங்கப்பட்டு சென்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டாக்டர். றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பின் போது, கல்முனை பணிமனையில், உத்தியோகத்தர் ஊழியர்களால் டாக்டர். றிபாஸ் வரவேற்கப்பட்ட சமயம், முன்னாள் பணிப்பாளர் டாக்டர். சுகுணனும் உடனிருந்து வரவேற்றார்.
இதன்போது, இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் நீதி, நேர்மையுடன் கல்முனைப் பிராந்தியத்தின் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட விருப்பதாக புதிய பணிப்பாளர் டாக்டர். றிபாஸ் சூளுரைத்ததுடன்,
அதற்காக அனைத்துதரப்பினரதும் பூரண ஒத்துழைப்பைத்தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதேவேளை மட்டக்களப்பு பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர். சுகுணன் செவ்வாய்க்கிழமை கடமைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு அங்கு உத்தியோகத்தர், ஊழியர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் வரவேற்பளித்தனார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House