
posted 31st January 2022

மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீப்
பலாங்கொடை, கூரகல ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் தீர்மானம் ஒன்று இன்று (திங்கள்) நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம், மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்பு முகைதீன் ரொஷான் அக்தர் கண்டனப் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து சபையில் உரையாற்றினார்.
உறுப்பினர் ரொஷான் அக்தர் கண்டனப் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில்;
“இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு விடுக்கப்படும் பேரினவாத, இனவாத சவாலாகவே ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் அமைந்துள்ளது.
சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்த தொன்மைமிக்க ஜெய்லானி பள்ளிவாசலை அது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்படும் இனவாத செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது.
இலங்கையில் இன்று சிறுபான்மையினர் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது பௌத்த பேரினவாதம் அரக்கத்தனங்களைக் கட்டவிழ்த்து வருகின்றது.
சமய அனுஷ்டானங்களைச் செய்யும் இடங்களில் கூட தமது கோரக்கரங்களை நீட்டும் நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது.
கூரகல, ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றிக் கொள்ளுமாறு அதன் நிருவாக சபையிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரியுள்ளதாக நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் ஸ்தாபகர் வத்துர கும்புரெ தர்மரத்னதேரர் என்பவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசின் ஆசிர்வாதத்துடன், முஸ்லிம்களின் உரிமைகளுக்கு விடுக்கப்பட்டுவரும் சவால்களில் ஓர் அங்கமே இதுவாகும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவுள்ள கிழக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெய்லானி பள்ளிவாசல் விவாகரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீப் உரையாற்றுகையில்;
இன்றைய அரசு இனவாதத்தை கைவிடாத வரை எந்த மீட்சியையும் எட்டவே முடியாது; அன்றேல் இலங்கையை மீட்சி பெறவைப்பது என்பது ஜென்மக்கனவாக முடியும்” என்றார்.
கண்டனத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B