
posted 25th January 2022
கடந்த வருடம், இரு முக்கிய சவால்களை முகம் கொடுத்தபோது, அரசு சார்பற்ற நிறுவனங்கள் எமக்கு கை கொடுத்து அந்நேரம் மக்களுக்கு இருந்த தேவைகளை நிவர்த்தி செய்தமையால், மன்னார் மாவட்டத்திற்குக் கிடைத்த பாராட்டுதல்களுக்கு அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேனென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு அரசு சார்பற்ற நிறுவனத்தின் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் செவ்வாய்கிழமை (25.01.2022) காலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர்களும் மற்றும் கல்வி கடற்தொழில் திணைக்களத்தின் பிரதிநிதிகளுமே கலந்து கொண்டனர்.
அச்சவால்களான, கொரொனா, வெள்ளப் பெருக்கு அனர்த்தங்கள், என்பவற்றை நினைவு படுத்திய அரச அதிபர், கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியவர்களை பராமரிப்பதற்காக நிலையங்களை ஏற்படுத்தி இருந்தோம்.
அப்பொழுது அரசு சார்பற்ற நிறுவனங்களாகிய உங்களிடம் பல உதவிகளை கோரியிருந்தோம். திடீரென உதவிகள் உங்களிடம் கோரப்பட்டபோதும் நீங்கள் உங்கள் உயர் மட்டங்களிலிருந்து அனுமதி பெற்று உதவிகரம் நீட்டியிருந்தீர்கள்.
கொவிட் தொற்றாளர்களை இடைத்தங்கல் முகாம்களில் வைத்து பராமரித்த விடயம் மன்னாரில் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதாக பாராட்டப்பட்டோம்.
இந்நோய்க்கு உள்ளானவர்கள், எங்கள் மாவட்ட மக்கள் மாத்திரம் அல்ல, மாறாக, வேறு மாவட்ட நோயாளிகளும் இங்கு கொண்டவரப்பட்டுப் பராமரிக்கப்பட்டார்கள். அந்த வகையில் சுகாதார திணைக்களத்தை சார்ந்தவர்களையும், அரசு திணைக்கள மற்றும் அரசு சார்பற்ற திணைக்களங்களையும் நான் வாழ்த்துகின்றேன், நன்றியும் தெரிவித்து நிற்கின்றேன்.
அத்துடன் எமக்கு என்றும் இல்லாதவாறு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. அந்த நேரம் கூட உங்கள் உதவி எமக்கு கிடைத்தது.
இவ்வாறு இருக்க, கடந்த வருடம் அரசு சார்பற்ற நிறுவனங்களின் அபிவிருத்தி திட்டங்களை நாம் ஆராய்ந்தோம். அரசு நிதிக்கு மேலாக அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதி எம் மாவட்டத்துக்கு கிடைக்கப் பெற்றது.
இதன் மூலம் எமது மாவட்ட மக்கள் பல நன்மைகள் அடைந்துள்ளனர். அதற்கும் நான் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டு உங்கள் திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்று நாங்கள் கடந்த வருடம் ஆலோசனையைத் தெரிவித்திருந்தோம். அதற்கமைய நாம் உங்கள் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
இங்கு சில அரசு சார்பற்ற நிறுவனங்களை நாம் இக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. காரணம் அவர்கள் திட்டங்களுக்கு அனுமதி மட்டும் பெற்றுச் சென்றவர்கள்தான். ஆனால் அவர்கள் எந்தவிதமான செயல்பாடுகளிலும் இறங்கவில்லை.
.
மாவட்ட செயலகத்துக்கு அறிவிக்காமல் எவரும் எந்த அபிவிருத்தி செயல்களும் முன்னெடுக்க முடியாது என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விடயமாகும் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House