உற்பத்தி திறனில் மன்னார் மூன்றாம் இடம் - அரசாங்க அதிபர்
உற்பத்தி திறனில் மன்னார் மூன்றாம் இடம் - அரசாங்க அதிபர்

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்

தேசிய மட்டத்தில் நடைபெற்ற உற்பத்தி திறன் மதிப்பீட்டின் போட்டியில் மன்னார் மாவட்ட செயலகம் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் முன்னேறியுள்ளோம். நாம் முதலாம் இடத்தைப் பிடிக்க முடியும். அதற்காக கடுமையாக அனைவரும் ஒன்று கூடி உழைப்போம் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

திங்கள்கிழமை (03.01.2022) மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான கடமை செயல்பாடுகளை ஆரம்பித்த வைபவ ரீதியான நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

நாம் மூன்றாம் இடத்தை பெற்றிருப்பது தையிட்டு மனச்சஞ்சலம் வேண்டாம். இம்மட்டத்திற்கு வருவதற்குக் கடுமையாக உழைத்த அனவருக்கும் எனது பாராட்டுகள். அத்துடன், இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து தமது பெரும் முயற்சிகளுடன் இந்நிலையை அடைய உதவிய பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கிரிஷ்ணராசன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து எமது செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு இ. றொபின் அவர்களுக்கும் எனது பாராட்டை இக்கணம் தெரிவிக்கின்றேன்.

இச்சமயத்தில், கடந்த வருடம் விளையாட்டுத் துறையில் எமது மாவட்டம் மாகாண ரீதியிலும், தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை புரிந்து எமக்கு பொருமையை ஈட்டித் தந்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் எமது விளையாட்டு அதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் ஒற்றமையான செயல்பாடாகும். எனவே, எமது மாவட்ட வீரர்கள், வீராங்கணைகளை தேசிய மட்டம் வரைக்கும் இவர்கள் கொண்டு சென்ற இவர்களையும் நான் பாராட்டுகின்றேன் என அரச அதிபர் தமது அதிகாரிகளின் கடும் உழைப்பைப் பாராட்டி னார்.

உற்பத்தி திறனில் மன்னார் மூன்றாம் இடம் - அரசாங்க அதிபர்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House