
posted 31st January 2022
கிடைக்காத விடயம் ஒன்றைப் பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள். கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என்று இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள். அது சாத்தியமல்லாத விடயம். எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகளின் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம், எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கில் தமது எதிர்காலத்தை இழந்துவிட்டார்கள், வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு நான் ஒன்றைக் கூறிவைக்க விரும்புகின்றேன். உங்களை பிழையாக வழிநடத்தும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள். உங்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. உங்களுக்கு முன்னால் உலகம் உள்ளது. உலகத்தை நோக்கி உற்றுப்பாருங்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள். அத்தோடு இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்புவதன் மூலம் ஒரு நாடு கிடைத்துவிடுமா?
ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது. அதனை நாங்கள் பேசி நடைமுறைப்படுத்துமாறு கோரினால் அது சாத்தியப்படும். அதை விடுத்து நாங்கள் கடிதம் அனுப்புவதன் மூலம் அது நடைபெறாது. அத்தோடு நானும் வெளிவிவகார அமைச்சரும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் தமிழ் பேசும் அனைத்துக் கட்சியினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய உள்ளோம்.
சந்திப்புகள் மூலம் இங்கு உள்ள பிரச்னைகள் தொடர்பில் நாங்கள் பேசி அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நான் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்றபோது அங்கே போதைப்பொருள் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்டோரே பலர் கைதிகளாக உள்ளனர். வடக்கில் இந்த போதைப்பொருளை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நான் யோசித்துள்ளேன்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை ஆரம்பித்து அந்த புனர்வாழ்வு நிலையத்தில் ஊடாக போதைக்கு அடிமையானோருக்கு விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் வடக்கில் இந்த போதைப்பொருள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்.
எமது இந்த நடமாடும் சேவை மூலம் நான் ஒரு விடயத்தை கண்டறிந்து உள்ளேன். வடக்கில் காணி பிரச்னை என்பது ஒரு பெரிய பிரச்னையாக காணப்படுகின்றது. இந்த விடயத்தை நாங்கள் கட்டாயம் ஜனாதிபதிக்கு தெரிவித்து அதற்கு என்ன செய்யலாம் என்ற விடயம் தொடர்பில் ஆராய்வேன் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House