இறைவன் இருக்கிறான் என்று மனதில் கொண்டு நம் கடமைகளைச் செய்வோம்  - அரசாங்க அதிபர்

மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே நாம் அவரவர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளோம். நம்மை நம்பி வரும் மக்களுக்கு நீதியோடும், நேர்மையோடும் நமது கடமையைச் செய்வோம்.

வியாழக்கிழமை (27.01.2022) காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற நீதி அமைச்சின் ஏற்பாட்டில் 'நீதிக்கான அணுகல்' மற்றும் காணாமல் போனவர் பற்றிய அலுவலகம் ஆகியவர்களின் பங்கேற்புடன் நடமாடும் சேவை இடம்பெற்றது.
நீதி அமைச்சை சார்ந்த எட்டு திணைக்களங்கள் இச் சேவையில் ஈடுபட்டன.
சேவையை ஆரம்பித்து வைத்து வருகை தந்திருந்த கிராம அலுவலகர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மத்தியில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்;

அரசு செயல்பாட்டில் மேற்கொள்ளுகின்ற திணைக்களங்கள் ஆலயங்கள் கோயில்களுக்கு சமமான ஒரு நிலையிலேயே செயல்படுகின்றன.

நாங்கள் இறைவனை நாடுகின்றோம். அவர் நமது குறைகளைத் தீர்ப்பாரென்று எண்ணியே. அதேபோல்தான், மக்களும் எம்மைத் தேடி வருகின்றனர், தாம் எண்ணிவந்த கருமம் தீர்க்கப்பட்டு விடுமென்று. எனவே, மக்கள் நம்மை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கின்றார்கள் என்று கொஞ்சம் சிந்திப்போம்.

பொது மக்களோடு அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த நடமாடும் சேவையில் இந்த பிரிவில் நாம் அமர்ந்திருக்கின்றோம்.

இங்கு தெரிவிக்கப்படும் அறிவுரைகளை நாம் பெற்றுக்கொள்வதோடு எமக்குள்ள தெளிவின்மைகளை கேட்டறிந்து மக்களுக்கு சரியான நீதியான சேவைகளை செய்யும் முகமாக இந்த விழப்பணர்வுக்கான கருத்தரங்கு இடம்பெறுகின்றது.

இதை ஒவ்வொருவரும் முழுமையாக பயண்படுத்தி பொது மக்களுக்கு சென்றடையும் வண்ணம் இது பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.

இறைவன் இருக்கிறான் என்று மனதில் கொண்டு நம் கடமைகளைச் செய்வோம்  - அரசாங்க அதிபர்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House