
posted 20th January 2022
பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு மாகாணத்துக்கான திட்டங்கள் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹுல்டனும் பங்கேற்றார்.

எஸ் தில்லைநாதன்