இன்று தமிழ்த் தேசியக் கட்சிகள்  இந்தியத் தூதுவருடனான சந்திப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காக, தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இதன்போது கையளிக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்திய பிரதமரை சந்திப்பதற்கு இதன்போது, இந்திய தூதரக தரப்பால் கால எல்லை அறிவிக்கப்படலாம் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று தமிழ்த் தேசியக் கட்சிகள்  இந்தியத் தூதுவருடனான சந்திப்பு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House