
posted 31st January 2022
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதையும் உள்ளூர் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிவதையும் பிரதேச கடல் வளத்தை அழிப்பதையும் கண்டித்து பருத்தித்துறை கம்பர்மடம் மீனவர்கள் நேற்றுப் பகல் பருத்தித்துறை பொன்னாலை வீதியை கம்பர் மடத்தில் தடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தினால் பருத்தித்துறை பொன்னாலை வீதி சில மணி நேரம் போக்குவரத்துக்கு தடைப்பட்டு இருந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
இக் கோஷங்களின் போது மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் கடுமையாகக் கண்டித்ததுடன் மீன்பிடி அமைச்சரை மாற்று, அவர் எமக்கு வேண்டாம் எனவும் தெரிவித்தனர். ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பருத்தித்துறைப் பகுதியில் இருந்து வந்த வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவரை அங்கு வரவிடாமல் நுழைவாயில் வைத்து மீனவர்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக அவருடன் முரண்பட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளை ஏனைய மீனவர்கள் சக மீனவர்களைச் சாந்தப்படுத்தி திருப்பி அனுப்பியதுடன் சமாசத் தலைவரை அங்குள்ளவர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
(கடந்த சில தினங்களாக, குறிப்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் பெருமளவில் பருத்தித்துறைக்கடற் பகுதியில் கரையை அண்டிய சுமார்500 மீற்றர் தூரத்தில் வந்து உள்ளூர் மீனவர்கள் கையில் இருந்த மீன்பிடி வலைகள் முழுவதையும் சுக்கு நூறாக அறுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் ஆறு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதமடைந்து உள்ளன. அதே போல வடமராட்சி வடக்கு கடலோரத்தில் ஏனைய பகுதிகளிலும் இந்திய இழுவைப் படகுகளினால் மீன்பிடி வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தைக் கண்டித்து நேற்று (திங்கட்கிழமை) பகல் ஒன்று கூடிய கப்பர் மடத்தைச் சேர்ந்த மீனவர்களும் பெண்களும் கப்பர்மடம் ஊடாகச் சென்றும் பருத்தித்துறை பொண்ணாலை வீதியை இரு மருங்கிலும் உடைந்த வள்ளங்கள், கட்டு மரங்களைப் போட்டும் வீதியை மறித்து , பருத்தித்துறை நோக்கிய தரைப்பகுதியில் நின்று பதாகைகளோடு அட்டைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B