இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்னைகள் பற்றி இந்திய துணைத்தூதர் ராம் மகேஷூடன் சந்தித்து

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஷை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்னைகள் பற்றிய மனு ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்திய தூணைத் தூதரகத்துக்கு சென்ற அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, தலைவர் நிஹால் கலப்பதி, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஷை சந்தித்து பேசினர்.

அவர்கள் கையளித்த மனுவில், சுமார் ஒரு தசாப்த காலமாக இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் வடபகுதி மீன்பிடித் தொழில் முற்றாக சரிவடைந்துள்ளது. இந்நிலை காரணமாக வட பகுதி சுமார் ஐம்பதாயிரம் மீனவர்களும், அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களான சுமார் இரண்டு இலட்சம் பேரும் முகம்கொடுக்கும் நிலைமை மிகவும் கவலையானது.

இந்திய மீனவர்களின் செயல்பாட்டால் இந்நாட்டு மீனவர்களுக்கும், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கும் ஏற்படும் அழிவு நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அத்துடன், அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத இழுவை மடி முறை காரணமாக கடலின் அடிபரப்புச் சூழலுக்கு ஏற்படும் அழிவு பாரியதொன்றாகும். இந்நிலமை காரணமாக இந்நாட்டு மீன்பிடித் துறைக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 100 கோடி ரூபாயாகும்.

அத்துடன், கடல் சூழலுக்கு ஏற்படும் அழிவை எடைபோட முடியாது. இவ்விடயம் குறித்து எமது நாட்டு உரிய பொறுப்பு வாய்ந்தோருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறியத் தந்தாலும், கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், பேச்சு நடத்தியிருந்தாலும் ஆக்கபூர்வமான எவ்வித தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமற் சென்றுள்ளது. எனவே இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகள் தொடர்பான பிரச்னைகள் பற்றி இந்திய துணைத்தூதர் ராம் மகேஷூடன் சந்தித்து

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House