
posted 5th January 2022
பருத்தித்துறையில் இருந்து திருகோணமலைக்கு புறப்பட்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மீது வல்லை புறாப்பொறுக்கி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை(05) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ் வண்டியின் முன் பக்க கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து பருத்தித்துறை சாலையில் இருந்து பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து நெல்லியடி மற்றும் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த பொலிசார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 7 மணி அளவில் இருந்து பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று செவ்வாய்க்கிழமை(04) இரவு எட்டு முப்பது மணி அளவில் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியின் நடத்துனர் மற்றும் சாரதி மீது நெல்லியடி நகர் பகுதியில் வைத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
பருத்தித்துறை சாலை பேரூந்து மீது இன்று அதிகாலையில் கல் வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று இரவு பேரூந்து சாரதிகளுக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென்று பருத்தித்துறை சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வீச்சு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
இன்று அதிகாலை பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பருத்தித்துறை சாலை பேரூந்து மீதே இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.இதனால் பேரூந்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
இதேவேளை நேற்று இரவு இடம் பெற்ற பேருந்து சாரதிகளுக்கும் பருத்தித்துறை சாலை சாரதிகளுக்கும் இடையில் இடம் பெற்ற கைகலப்பில் இரண்டு பருத்தித்துறை சாலை சாரதிகள் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நெல்லியடி போலீசார் கைது செய்துள்ளதாகக் நெல்லியடி போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றன.
இதே வேளை குறித்த அசம்பாவிதங்களுடன் கைது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடின் பயணிகள் பேரூந்தை சேவையில் ஈடுபடாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு ஏற்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் உரிய நடவடிக்கை ஏடுக்கக் கோரி சில மணிநேரங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடஸடனர். போலீசாரின் தலையிடடால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House