
posted 27th January 2022
சைவசமய பாட ஆசிரியர் பணி மிகவும் சவால் மிக்கது. பாடசாலை ஆரம்பிக்கும் போதும், நிறைவுறும் போதும் சமய ஆராதனைகள் சைவசமய பாட ஆசிரியர் பொறுப்பில் விட்டு விட்டு ஏனையோர் ஒதுங்கி கொள்வதும், மாணவர்களின் சமய நடவடிக்கைகள் அனைத்துக்கும் சைவசமயம் கற்பிக்கும் ஆசிரியரே வகை கூற வேண்டிய நிர்பந்தம். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை கவலை தருகிறது. எமது சைவ சமயத்தை வளர்க்க எமது பெரியார்கள் செய்த அளப்பரிய தியாகங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் ஆற்றிய பணிகள் காரணமாக இன்று உலகம் முழுவதும் சைவநெறி தலைசிறந்து விளங்குகிறது. இவ்வாறு கல்முனை கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் மா. லக்குணம் குறிப்பிட்டார்.
கல்முனை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் பணியாற்றி இளைப்பாறிய ஆசிரியை செல்வி. க. வசந்தியின் சேவைநலன் பாராட்டு விழா இவ் வித்தியாலய அதிபர்.க. தியாகராசா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த மா. லக்குணம் அங்கு மேலும் பேசுகையில்;
சுவாமி விவேகானந்தர் நூறு வீர இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்த பாரத தேசத்தை அறியாமையில் இருந்து மீட்டு தருகிறேன் என்றார். இப்போது இளைஞர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நூறு பேர் சைவத்தை வளர்க்க முன்வருகின்றனர் அவர்களை வழிநடத்த சுவாமி விவேகானந்தர் போன்ற பெரியார்கள் இல்லை. இந்த பாடசாலையில் நாவலர் சிலையை அமைத்து திறந்து வைத்தவர்கள் இளைஞர்கள். கருணை உள்ளம் அறக்கட்டளை மூலம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆறுமுக நாவலர் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. மாதோட்டம் எனும் ஊரில் தேன் பொந்து ஒன்று உள்ளது. அதை சென்றடையுங்கள் என்று சைவர்களுக்கு விஞ்ஞாபனம் ஒன்றை விடுத்தார். அந்த அறைகூவல் இன்று திருக்கேதீச்சரம் பிரமாண்டமான முறையில் தோற்றம் பெற காரணமாக அமைந்தது. ஆனால், இன்று அதன் பெருமையை உணர்ந்து கொள்ளும் நிலையில் சைவசமய தந்தவர்கள் இல்லை என்பதுதான் கவலை தருகிறது.
அந்நியர் ஆட்சியில் பசு வதைக்கு அஞ்சி இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றார் ஞானப் பிரகாச முனிவர். சைவர்களுக்கு புண்ணியத்தின் அடையாளயாகவும், சமயவாழ்வோடு பின்னிப் பிணைந்து தெய்வ அம்சம் நிறைந்தது பசு அதை அன்னியர்களுக்கு இறைச்சிக்காக தன் கையால் கொண்டு வழங்கும் கொடுமையை அவரது மனம் ஏற்கவில்லை. இன்று பசுவதை சட்டங்கள் மூலம் தடைசெய்யும் நிலை உருவாகியுள்ளது. ஞானப்பிரகாச முனிவர் கண்ட கனவு நிறைவேறியது. இதை எண்ணிப் பார்க்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதுதான் வருத்தம்.
சிவபூமியில் வாழும் நாம், எமது சைவ பாரம்பரியம் தமிழர் பண்பாடு என்பவற்றை கட்டிக் காக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும். சைவர்களால் பிறந்த அனைவரும் சைவநெறிமை வளர்க்க திடசங்கற்பம் கொள்ள வேண்டும். இந் நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச. சரவணமுத்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான. த. செந்தூரன் திருமதி. சி. பாக்கியராசா திருமதி.எஸ். உருத்திரராசா ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House