
posted 16th January 2022


பேராசிரியர் மர்ஹூம் அல்லாமா எம்.எம். உவைஸ்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழிகள் துறை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர் மர்ஹூம் அல்லாமா எம்.எம். உவைஸின் நினைவு தின நிகழ்வும், நினைவு தினக்கருத்தரங்கும் கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ஏ.றமீஸ் தலைமையில், எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப ஜெஸ்மின் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ கலந்து கொள்விருப்பதுடன்,
கல்வி அமைச்சர் தினேஷ் குணர்த்தன, ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுமுள்ளனர்.
முதலாம் அங்கமான ஆரம்ப நிகழ்வின் போது, அல்லாமா மர்ஹூம் உவைஸ் ஞாபகார்த்த முத்திரையும், நினைவுதின சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்படும்.
பேராதனைப்பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தலைமையில் இரண்டாம் அங்கமான கருத்தரங்கம் இடம்பெறும்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகும் கருத்தரங்கத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர், அ. சண்முகதாஸ் (தமிழ் இலக்கிய வரலாற்றில் ம.மு. உவைஸின் பணிகள்) கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறை தலைவர் பேராசிரியர் செ. யோகராசா (இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்று எழுதுகையில் ம.மு. உவைஸ் - ஒரு விமர்சனப்பார்வை), பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸவரன் (இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்தில் உவைசின் படைப்புக்கள்) ஆகியோர் கருத்துரைகள் ஆற்றவுள்ளனர்.

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House