
posted 15th January 2022
பிரதமர் ராஜபக்ஷ தொடர்ச்சியாக திருப்பதிகளுக்கு சென்று வருவதாலும், இந்து கலாச்சார அமைச்சுக்கு பொறுப்பாக இருப்பதாலும் இந்து அமைப்புக்கள் மற்றும் இந்து குருமார் பஞ்ச ஈச்சரங்களின் அமைவுப் பிரதேசங்களை புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த ஒருமித்த கோரிக்கையை அவரிடம் முன்வைக்க வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குகதாஸ் மேலும் விடுத்திருக்கும் தனது அறிக்கையில்;
இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்கள், இந்து குருமார் ஒன்றியங்கள் யாவும் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புராதன தொன்மை மிக்க பல அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்ந்த சிவாலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டேஸ்வரம் போன்ற பஞ்ச ஈச்சரங்களின் அமைவுப் பிரதேசங்களை புனிதப் பிரதேசங்களாக முறைப்படி அரசாங்கம் பிரகடனப்படுத்துவதற்கு ஒருமித்த கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும்.
தற்போது இந்து கலாசார அமைச்சுக்கு பொறுப்பாக பிரதமர் மகிந்த ராஐபக்ச இருப்பதால் விரைவாக இக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களும் இந்த புனிதப் பணியை நிறைவேற்ற உலக வாழ் இந்துக்கள் சார்பாக கோருகின்றோம்.
மகிந்த ராஐபக்ச தொடர்ச்சியாக திருப்பதி சென்று வருவதால் இந்து மதத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதாக உணர முடிகிறது. அதனால் அவருடைய அமைச்சின் ஊடாக நிறைவேற்றுவது பொருத்தமானதாக இருக்கும் எனது திடமான நம்பிக்கை.
ஆகவே, இந்து அமைப்புக்கள் அரசியல் கடிதம் எழுதுவதை ஒத்தி வைத்து விட்டு, உங்கள் பிரதான பணியான மதப் பணியில் இதனை விரைவு படுத்துங்கள். 1965இல் அரசியல்வாதிகள் முன்னேடுத்தமையால் திருக்கோணேஸ்வரம் புனிதப் பிரதேச ஆக்கும் பணி நிறைவேறாது தடைப்பட்டது. எனவே, இந்து அமைப்புக்களாக புனிதப் பயணத்தை ஆரம்பியுங்கள் என வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House