அரச உத்தியோகத்தர்களின் தொடர்பு அதிகமாக காணப்படுவதால் மாவட்ட செயலகத்தில் இலங்கை வங்கி கிளை - - அரச அதிபர்

மன்னார் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் கணக்குகள் அதிகமாக இலங்கை வங்கியினூடாகவே நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றமையால் எங்கள் உத்தியோகத்தர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் இச் சேவை மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டே மன்னார் மாவட்ட செயலகத்தில் இவ் வங்கிக்கு இதன் செயல்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளோம் என மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

வியாழக்கிழமை (06.01.2021) மன்னார் மாவட்ட செயலகத்தில் நவீன முறையில் இயங்கக்கூடிய இலங்கை வங்கி கிளையை திறந்தவைத்து மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்;

மன்னார் மாவட்ட செயலகத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் இலங்கை வங்கி கிளை மீண்டும் இங்கு ஆரம்பிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

நான் இங்கு மேலதிக அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் மாவட்ட செயலகத்தில் வசதியுள்ள ஒரு கட்டிட பகுதி ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இங்கு அந்நேரம் வசதி இன்மையால் அதை நிறைவேற்ற முடியாத நிலையில் மாவட்ட செயலகத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் அவ்விடம் வங்கிக்கு வசதியற்ற தன்மை காணப்பட்டபோதும் இலங்கை வங்கியானது தங்களால் இயன்ற சேவையை ஆற்றி வந்தததை காணக்கூடியதாக இருந்தது.

1996 ஆம் ஆண்டு நான் கமநல சேவை உதவி ஆணையாளராக இங்கு பதவியேற்றதிலிருந்து இலங்கை வங்கியானது எமது விவசாயிகளுக்கு சிறந்த முறையில் உதவிக்கரம் நீட்டிய ஒரு வங்கியாக காணப்பட்டது.

தற்பொழுது இப் பகுதியில் புதிய வங்கிகள் உதயமாகினாலும், ஆரம்ப காலத்திலிருந்து இவ் வங்கியானது எமது மாவட்டத்தின் முக்கியஸ்தர்களான விவசாயிகளுக்கும் அத்துடன் இங்கு பிரதான தொழில் கொண்ட மீன்பிடியாளர்களுக்கும், அவர்களின் தொழில்களை வலுவாக்குவதற்கு இவ் வங்கி எம் மாவட்டத்தில் இயங்கியுள்ளது.

தற்பொழுது இவ் வங்கியானது நவீன முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை இலகுபடுத்தி அவர்களுக்கான சேவையினை சிறந்த முறையில் ஆற்றிவருவதையிட்டு அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

ஏழைகளும் பணக்காரர்களும் இணையும் இடம்தான் வங்கியாகும். இரு பகுதினருக்கும் பாதுகாப்பு கொடுக்கும் இடமாக வங்கிகள் காணப்படுகின்றது.

அதாவது பணக்காரர் தங்கள் பணத்தை பாதகாப்பாக வைத்துக் கொள்ளவும், ஏழை தனக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் ஒரு மத்திய இடமாகவே வங்கிகள் செயல்படுகின்றன.

ஆகவேதான் நிதியோடு செயல்படும் இவ் வங்கிக்கு ஒரு சிறந்த இடத்தை இங்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்விடத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

மாவட்ட செயலகத்துக்கு பொது மக்கள் வரும்பொழுது அவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் செயல்பட வேண்டும் என்பதுடன் எங்கள் மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் கணக்குகள் இவ் வங்கியூடாகவே நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றமையால் எங்கள் உத்தியோகத்தர்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் இவ் சேவை மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டே இவ்விடத்தில் இதன் செயல்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.

ஆகவே இவ் வங்கியானது அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்விடத்தில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது நலம் என இங்கு தெரிவித்து நிற்கின்றேன்.

அவ்வாறு எமது உத்தியோகத்தர்களும் இவ் வங்கியில் வாடிக்கையாளர்களின் நிலையை பார்த்து உங்கள் நேரங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டு சேவையினை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் தொடர்பு அதிகமாக காணப்படுவதால் மாவட்ட செயலகத்தில் இலங்கை வங்கி கிளை - - அரச அதிபர்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House