அம்பாறை மாவட்டம் வரலாற்று சாதனை

இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட, மாவட்டமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியில், அம்பாறை மாவட்டம் சார்பாக பங்குபற்றிய நிந்தவூர் அல்-மதீனா விளையாட்டுக் கழகத்தின் கபடி அணியினர் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தேசிய மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 8, 9, 10 ஆம் திகதிகளில் கொழும்பு டொரிங்கடன் உள்ளக விளையாட்டரங்கில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.

இதன்போது அம்பாறை மாவட்டம் சார்பாக பங்குபற்றிய நிந்தவூர் அல் - மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினருடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அணியினர் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.

இந்த இறுதிப் போட்டியில் அதிககூடிய புள்ளிகளைப் பெற்று நிந்தவூர் அல்-மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இந்த சம்பியன் அணியினருக்கு தங்கப் பதக்கம், ஒரு லட்சம் ரூபா பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்த சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக, இலங்கை தேசிய கபடி அணிவீரரும், மேற்படி விளையாட்டுக் கழக வீரருமான எம்.ரி.அஸ்லம் சஜா தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கான தங்கப்பதக்கம், சம்பியன் கேடயம், பணப்பரிசு, சான்றிதழ்களை இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அனுரபத்திரன வழங்கிவைத்தார்.

இதேவேளை தேசிய மட்டத்தில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அம்பாறை மாவட்டத்திற்கும், குறிப்பாக நிந்தவூருக்கும் வரலாற்றுப் பெருமை சேர்த்துள்ள நிந்தவூர் அல்-மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன.
அத்துடன் குறித்த கபடி அணியினருக்கு நிந்தவூரில் பொதுவரவேற்பளிப்பதற்கான முஸ்தீபு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம் வரலாற்று சாதனை

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House