அமான் அஷ்ரப் விஜயம்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்தார்.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்திற்குக்காரணமான மர்ஹும் அஷ்ரபின் புதல்வரது இந்த விஜயத்தின் போது பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளையும் அவர் பார்வையிட்டு கலந்துரையாடினார்.
குறிப்பாக பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகாரத்த் நூலகத்திற்கு அமான் அஷ்ரப் வருகை தந்த போது நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் அவரை வரவேற்றதுடன்,
நூலகத்தின் அஷ்ரப் சேகரிப்பு பகுதி, காப்பக சேகரிப்பு பிரிவு, நூதனசாலை என்பவற்றையும் அவர்பார்ரவையிட்டார்.

அங்கு “இலங்கை முஸ்லிம்களை ஆராய்தல்” எனும் நூலை நூலகர் றிபாயுத்தீன் ஞாபகர்த்தமாக வழங்கினார்.

மேலும் இந்த விஜயத்தின் போது மறைந்த பெரும் தலைவர் அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரபுக்கு,
பல்கலைக்கழக கலை, கலாச்சாரபீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் எழுதிய “போர்க்கு பிந்திய அரசும், சமூகமும்” எனும் நூலும்,
மற்றும் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவுடன் இணைந்து கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் எழுதிய “கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுப் பகிர்வு” எனும் நூலையும் வருகையின் நினைவாக பேராசிரியர் பாஸில் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

அமான் அஷ்ரப் விஜயம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House