அதிவேக, அதிசொகுசு ரயில் சேவை நேர‌சூசியை மாற்றுக - ஸாஹித் முபாற‌க்
அதிவேக, அதிசொகுசு ரயில் சேவை நேர‌சூசியை மாற்றுக - ஸாஹித் முபாற‌க்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் செய‌லாள‌ர் ஸாஹித் முபாற‌க்

கொழும்பு - மட்டக்களப்பு அதிவேக, அதிசொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளமை மூல‌ம் ம‌க்க‌ளின் மீக‌ நீண்ட‌கால‌ தேவை நிறைவேற‌வுள்ள‌து என்ப‌தை பாராட்டுவ‌துட‌ன் இத‌ன் நேர‌சூசியில் மாற்ற‌ம் தேவை என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சியின் செய‌லாள‌ர் ஸாஹித் முபாற‌க்கினால் போக்குவ‌ர‌த்து அமைச்ச‌ருக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ க‌டித‌த்தில் மேலும் குறிப்பிட்டிருப்ப‌தாவ‌து,

மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01-30 புறப்பட்டு கொழும்புக்கு காலை 08-45க்கு வந்தடையக்கூடிய‌ வ‌கையில் சொகுசு ர‌யில் சேவை ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌வுள்ள‌மை ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ அர‌சின் தொட‌ர் அபிவிருத்தி முய‌ற்சிக‌ளை காட்டுகிற‌து.

இந்த‌ சொகுசு ர‌யில் மீண்டும் கொழும்பிலிருந்து மாலை 03-15க்கு புறப்பட்டு மட்டக்களப்புக்கு இரவு 09-52க்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த‌ நேரம் என்ப‌து அம்பாரை மாவ‌ட்ட‌ ப‌ய‌ணிக‌ளுக்கு கொஞ்ச‌மும் பொருத்த‌ம‌ற்ற‌ நேர‌மாகும்.

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பை இர‌வு 10ம‌ணிக்கு வ‌ந்த‌டையும் இச் சொகுசு ர‌யில் சேவையானது, க‌ல்முனை, ம‌ற்றும் அம்பாரை மாவ‌ட்ட‌ ப‌ய‌ணிக‌ள் த‌ம‌து பிர‌தேச‌த்துக்கு செல்ல‌ இர‌வு நேர‌ ப‌ஸ்க‌ள் கிடைப்ப‌து க‌ஷ்ட‌மாகும். பெரும்பாலும் மாலை 8 ம‌ணிக்கு பின்ன‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிலிருந்து அம்பாரைக்கு ப‌ஸ் கிடைப்ப‌து அரிது என்பது யாவரும் அறிந்ததே.

அதேபோல், ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் இருந்து அதிகாலை 1.30க்கு கொழும்பு புற‌ப்ப‌டும் என்ப‌தும், அம்பாரை மாவ‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு சிர‌ம‌மாகும். ம‌ட்ட‌க்க‌ள‌ப்பிற்கும், க‌ல்முனைக்கும் இடைப்பட்ட தூரம் 44 கிலோ மீட்ட‌ர் ஆகும்.

ஆக‌வே, இந்த‌ சொகுசு ர‌யில் சேவையின் நேர‌சூசியை மக்களின் வசதிகுறித்து மாற்ற‌ம் கொண்டுவ‌ர‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.

அதிவேக, அதிசொகுசு ரயில் சேவை நேர‌சூசியை மாற்றுக - ஸாஹித் முபாற‌க்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House