
posted 10th January 2022
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.
மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் வைபவத்தின்போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்ட 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House