26 ஆவது ஆண்டு நிறைவு

கல்முனைப் பிராந்தியத்தின் பெயர் பெற்ற முக்கிய விளையாட்டுக்கழகமாக ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழழகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன் கூடிய ஒன்று கூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கழகத்தலைவரும், ஊடகவியலாளருமான எம்.எம்.ஜெஸ்மின் தலைமையில், சம்மாந்துறை சீ.பி.எஸ்.கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத் தலைவர் இந்திக நளீன் ஜயவிக்கிரம, செயலாளர் சிதத்லியனாராய்ச்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முக்கிய அங்கமாக இடம்பெற்ற நடப்பு வருட நிருவாகிகள் தெரிவின் பொது மீண்டும் தலைவராக எம்.எம். ஜெஸ்மினும், மீண்டும் செயலாளராக பேராசிரியர், கலாநிதி எஸ்.எல்.றியாசும், பொருளாதாராக எம்.எச்.எம். ஹனீபும் தெரிவு செய்யப்பட்டதுடன், நிருவாக நபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

கல்முனைப் பிராந்தியத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் குறிப்பாக கிரிக்கெட்துறை வளர்ச்சியில் நீண்டகாலமாகப் பங்காற்றிவரும் ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகம், விளையாட்டுத்துறையோடு மட்டுமன்றி பல்வேறு சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

சிறந்த ஆளுமையும், பொது நல நோக்கு மிக்க கழகத்தலைவர் எம்.எம். ஜெஸ்மின், செயலாளர் பேராசிரியர் கலாநிதி றியாஸ் ஆகியோரினதும் உறுப்பினர்களதும் அயராப் பெரு முயற்சிகள், செயற்திட்டங்கள் காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகம் முதன்மை பெற்றுத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

26 ஆவது ஆண்டு நிறைவு

எ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House