200 ஆவது கொடியேற்ற விழா

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது கொடியேற்று பெருவிழா நேற்று செவ்வாய் (04) மாலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

கொட்டும் பெருமழைக்கு மத்தியிலும் வரலாற்றுப் பெருமை மிக்க இக்கொடியேற்றுவிழா, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும், கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர். எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கொடியேற்று விழாவையொட்டி கல்முனை மாநகரம் பெரும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றது.

மாநகர வர்த்தகமையங்கள் மற்றும் பிரதான வீதிகள் பச்சைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், கொடியேற்று விழாவை வரவேற்கும் பதாகைகள், தோரணங்களும் நகர் முழுவதும் காணப்பட்டன.

நேற்று மாலை முதல் கொடியேற்றுதலுடன், பெருமளவு மக்களது பங்குபற்றுதலுடனும் ஆரம்பமான இக் கொடியேற்று விழா எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யாத்திரைகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க 1963 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையின் பிரகாரம், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விழாவான குறித்த 200 ஆவது கொடியேற்று விழா ஞாபகர்த்தமாக இலங்கை முத்திரை வெளியீட்டுப் பணியகம் விசேட நினைவு முத்திரை ஒன்றையும் வெளியிடவிருகின்றது.

நாளை ஜனவரி 6 ஆம் திகதி மேற்படி தர்ஹா பள்ளிவாசலில் வைபவ ரீதியாக இந்த விசேட முத்திரை வெளியிடவிருக்கின்றது.

பாதுஷா சாஹூல் ஹமீது நாயகம் அவர்களின் நினைவாக வருடாந்தம் நடைபெற்றுவரும் இந்த கொடியேற்று விழாவின், 200 ஆவது கொடியேற்று விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

200 ஆவது கொடியேற்ற விழா

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House