13ஆவது திருத்தத்தை மாற்றிவிட்டோம் - சுமந்திரன்

இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி நாங்கள் சிந்தித்து செயல்படும்பொழுது அதனை கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவது என்பது நல்ல விடயமல்லவென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி மனு கொடுப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஆவணத்தைத் தயார்ப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவுக்கு தூதர் சென்றதன் காரணமாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்தியத் தூதர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் ஊடகவியலாளர்களை சந்திக்கின்றபொழுது நாங்கள் இந்த ஆவணத்தை முற்றுமுழுதாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக்கட்சியின் ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தை தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தெளிவாக கூறி இருக்கின்றார். ஆனால் சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்பொழுது 13ஐ நடைமுறைப்படுத்தும்படி கூறும்போது வடிவேலு பாணியில் நாங்கள் மாற்றிவிட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆம் திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதான். ஆகவே நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையைப் பற்றி சிந்தித்து செயல்படும்பொழுது, அதனை கேள்விக்குள்ளாக்ககூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவது என்பது நல்ல விடயமல்ல. தன்னை ஒரு புத்திஜீவியாகவும், அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக்கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை விடுத்து செயற்படவேண்டும் என்றார்.

உள்ளூராட்சிச்சபை தேர்தல் ஒத்திவைத்தமை தொடர்பாக அவரிடம் கேள்வியெழுப்பியபோது,

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது உள்ளூராட்சி சபைத்தேர்தலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை உள்ளூராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்றத்துக்கு பிரதி நிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் பல காலமாக மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கமும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாக இருக்கட்டும், அந்த தேர்தல்களை முகம் கொடுக்கவே அஞ்சுகின்ற சூழல் காணப்படுகின்றது.

இன்று அரசாங்கம் எந்த ஒரு தேர்தலையும் நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மிகமோசமான பொருளாதார நிலைமை, அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சி, தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பனவற்றால் ஒட்டு மொத்தமாக பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது அரசு கடந்த இரண்டு வருடங்களாக செயலற்ற அரசு என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் கொரோனாவை காரணம் கூறுகிறார்கள். ஆனால் உண்மையாகவே இந்த அரசை நடத்தக் கூடிய திறமை இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்ற கேள்வியெழுகிறது என்றார்.

13ஆவது திருத்தத்தை மாற்றிவிட்டோம் - சுமந்திரன்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House