13ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - கஜேந்திரகுமார்

13ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாகாண சபை தேர்தலில் போட்டியிடவும் எமக்கு விருப்பமில்லை. ஆனால், இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புகளுக்கே பிரச்னையாக இருக்கும். நாம் மாகாண சபையை கைப்பற்றி, அந்த வெற்றுக்கோஷத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

கடந்தமுறை ஆயர் இராயப்பு யோசப் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வென்று, இதிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி, இதை தாண்டி அரசியலை கொண்டு செல்ல செயல்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். மக்களை பகிஷ்கரிக்க அழைப்பு விட வேண்டாம் என்றார்கள். அதை நம்பினோம். ஆனால், இன்றுவரை அதை செய்யவில்லை.

எந்த அதிகாரமும் இல்லாத ஒன்றை தமிழ் மக்களிடம் திணித்து, வரப்போகிற அரசமைப்பில் 13ஆவது திருத்தம் உள்ளதாக கூறி மக்களை ஆதரிக்க வைக்கும் முயற்சியை முறியடிக்க நாம் போட்டியிட வேண்டும்.

நாம் 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஷ்கரித்தது. ஆனால், மக்களை பகிஷ்கரிக்க கோரவில்லை. மாகாண சபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாண சபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை நாமே ஏற்க வேண்டும் - என்றார்.

13ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - கஜேந்திரகுமார்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House