
posted 29th January 2022
உண்மையாக 13ஆவது திருத்த சட்டத்தினூடாக தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஆனால் தற்போதுள்ள நிலைமையில் முதலில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஆறு தமிழ் தேசிய கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனா். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடமாகாண சபையை கொண்டுவருவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றபோது, ஒரு சில தமிழ்க் கட்சிகள் அதற்கு எதிராக பொய் பேசும் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனா். இப்போதிலிருந்தே பொய் கூற ஆரம்பித்தால் தான் வட மாகாண சபை தேர்தல் வரும்போது தமது குறிக்கோள்களை அடைந்துகொள்ள முடியும் என்ற எண்ணப்பாட்டில் செயற்பட அவர்கள் ஆரம்பித்துள்ளனா்.
உண்மையாக 13ஆவது திருத்த சட்டத்தினூடாக தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் மறு கருத்துக்கு இடமில்லை. 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சம்பந்தன் உள்ளிட்டோர் இந்த திருத்தம் கொண்டுவந்த காலப்பகுதியிலேயே இந்த திருத்தம் போதுமானது இல்லை என்று கூறி இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். ஆகவே, தற்போதைய நிலையில் இருக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள். புதிதாக ஒரு தீர்வுக்கு செல்லத் தேவையில்லை என்பதே எங்களின் நிலைப்பாடாகவுள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House