13  ஆவது சட்டத்திருத்தத்தை நிராகரிப்போம்

இலங்கை அரசின் ஒற்றைஆட்சியில் உள்ள 13 ஆவது சட்டத்திருத்தத்தை நிராகரிப்போம் என்பதை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கைத் தமிழ்க்காங்கிஸ் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியமக்கள் முன்னணி நல்லூரில் நடத்திய கண்டனப்பேரணியில் எடுக்கப்பட்டபடங்களைக் காணலாம்.

'ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம்'எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணி நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை வீதியின் ஊடாக சங்கிலியன் தோப்பை (கிட்டு பூங்கா) சென்றடைந்தது.

இதன்போது,

தமிழர் தாயகத்தை சிங்கள - பௌத்த மயமாக்காதே!

வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும், சுயநிர்ணயத்தையும் அங்கீகரி!

தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு!

அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்

ஆக்கிரமிப்புப் படைகளான சிறீலங்கா இராணுவத்தை தமிழர் தாயகத்திலிருந்து அகற்று!

தமிழர்களின் நிலங்களை சுவீகரிப்பதை நிறுத்து!

எங்கள் கடலில் அந்நிய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்து!

முன்னாள் போராளிகளை சுதந்திரமாக வாழவிடு!

தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து!

என்ற கோஷங்களை எழுப்பினர்.

கிட்டு பூங்காவில் பேரணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு, 'கிட்டு பூங்கா பிரகடனமும் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முனணியின்பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என சில நூறுபேர் பங்கேற்றிருந்தனர்.

13  ஆவது சட்டத்திருத்தத்தை நிராகரிப்போம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House