
posted 22nd January 2022
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட “100 சிறுகதைகள்” நூலின் பிரதிகள் கிழக்கு மாகாண சபை முக்கியஸ்த்தர்களுக்கு திருகோணமலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் இந்த நூல் பிரதிகளை உரிய முக்கியஸ்த்தர்களுக்கு நேரில் வழங்கினார்.
குறிப்பாக திருமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்கள், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்பாளர் நவநீதன் இந்த முக்கிய நூலின் பிரதிகளை நேரில் வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பலகாத்திரமான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பிக்கும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவண முத்து நவநீதனின் முன்மாதிரி செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த 100 சிறுகதைகள் கொண்ட தொகுப்ப நூல் வெளியிட்டமை குறிப்பிட்டத்தக்கது.
மேலும் பணிப்பாளர் நவநீதன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு முன்மாதிரி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது குறித்து கலை, இலக்கியவாதிகள் மட்டுமன்றி பல்Nவுறு தரப்பினரும், பெரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமான மேற்படி 100 சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியீடு கிழக்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமையும் சுட்டிக் காட்டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House