
posted 13th January 2022
வடக்கில் இளைஞர், யுவதிகளுக்கான வேலையில்லாத பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
நேற்று புதன்கிழமை சஜித் பிரேமதாஸவின் பிறந்த தினம். ஆகையால் யாழ். மறைமாவட்ட ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஆயர் இல்லத்தில் சஜித் பிரேமதாஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்.ஆயரால் விசேட ஆசீர்வாத பூசை மேற்கொள்ளப்பட்டது.
ஆயருடன் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பத்திரன, இரான் விக்ரமரட்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.ஆயர்;
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று என்னை சந்தித்து கலந்துரையாடினார். அவர் தன்னாலான முயற்சியை மேற்கொண்டு அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார். ஏற்கனவே எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகளைச் செய்யவில்லை. ஆகவே அவருடைய அந்த பணியை பாராட்டவேண்டும். எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திரத் தொகுதிகளை அவர் வழங்கியுள்ளார்.
அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார். சுகாதாரமும் கல்வியும் அவருடைய முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது.
அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுடைய பிரச்னைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
நான் மூன்று விடயங்களை குறிப்பாக குறிப்பிட்டேன். அதாவது கல்வி, மீன்பிடி, விவசாயம். இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்யவேண்டும். அத்தோடு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்னை ஒரு பெரும் பிரச்னையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரினேன். ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் அதனை செய்யமுடியும் என அவர் தெரிவித்தார் என்றார்.


எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House