
posted 8th January 2022


இலங்கையின் முஸ்லிம் அரசியல் பரப்பில் அண்மைக்காலமாக பரப்பரப்புடன் பேசப்பட்டுவந்த, அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ள ஏழு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றுக்கு முற்றுப் புள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அரசின் 20 ஆவது அரசியலமைப்புத்திருத்தத்திற்கு கட்சிகளின் தீர்மானத்தை ஏற்காது வாக்களித்த முக்கிய முஸ்லிம் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலேயே குறித்த பரபரப்புத்தகவல் முஸ்லிம்கள் மத்தியில் பேசுப் பொருளாக அண்மைக்காலம் வரைமாறியிருந்தது.
குறித்த ஏழு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிப்பதுடன், அரசுடன் (பொதுஜன பெரமுன) அதனை இணைத்து கூட்டு சேர்ந்து அமைச்சு பதவிகளைப் பெறப் போவதாகவும் பரபரப்புத்தகவல்கள் வெளியாகிய வண்ணமிருந்தன.
சமூக வலைத்தளங்கள், முகநூல்கள், சில தமிழ் ஊடகங்களில் இத்தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
எனினும் இத்தகவல் உண்மைக்குப் புறம்பான, சோடிக்கப்பட்ட தகவலெனக்கூறி, குறித்த வதந்திக்கு வாயப்பூட்டுபோடப்பட்டுள்ளது.
மேற்படி அரசுக்கு ஆதரவளித்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், முஸ்லிம்காங்கிரசின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். ஹரீஸ் குறித்த பரபரப்புத் தகவலைத் தற்சமயம் முற்றாகத் மறுத்துள்ளார்.
கல்முனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியளாளர் சந்திப்பொன்றின் போது மேற்படி விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதனை அறுதியிட்டு முற்றாக மறுத்தார்.
புதிய கட்சியோ, கூட்டணியோ அமைப்பது பற்றியோ, அல்லது பொது ஜன பெரமுனவுடன் இணைவது அமைச்சுப் பதவிகளைப் பெறுவது பற்றியோ நாங்கள் கற்பனையில் கூட நினைக்கவில்லையென அவர் அறுதியிட்டுக் கூறினார்.
மேலும் இது தொடர்பில் நாங்கள் எவ்வித பேச்சுவார்தைகளையோ, ஆலோசனைகளையோ, நடவடிக்கைகைளயோ முன்னெடுக்கவில்லை எனவும் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தாம் தொடர்ந்தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலேயே பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
முஸ்லிம் அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருத்த தனிக் கூட்டு விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி இத்துடன் வைக்கப்பட்டுள்ள போதிலும், கட்சிக்கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட மேற்படி ஏழு நாடாளுனம்ற உறுப்பினர்கள் மீதான முஸ்லிம் சமூகத்தின் விமர்சனப்பார்வை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House