
posted 17th January 2022

“சமூகப் பணிகளில் நீண்டகாலமாக கல்முனை லயன்ஸ் கழகம் சலியாது சேவையாற்றி வருகின்றது. குறிப்பாக பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகக் கழகம் ஆற்றிவரும் சேவைகள் பெரும் பாராட்டுதலுக்குரியதாகும்”
இவ்வாறு கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த துரவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன்பாடசாலை அதிபர் செல்லையா பேரின்பராசா கூறினார்.
கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள அதிகஷ்டப்பிரதேச பாடசாலைகளுள் ஒன்றான துரவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்ளுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகம் உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிகழ்வில் கல்முனை நகர லயன்ஸ் கழகம் சார்பில் கலந்து கொண்ட கழகத்தலைவர் லயன். என். சிவராசா, வலயத்தலைவர் லயன் க. அரசரெட்ணம், ஆளுநரின் கல்வி சுற்றாடல், மற்றும் விளையாட்டுமையப்பொறுப்பு இணைப்பாளர் லயன். கே. பொன்னம்பலம், கழகப் பொருளாளர் லயன். த. சத்திய கீர்த்தி ஆகியோரை பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் வரவேற்றனர்.
நிகழ்வின்போது மேற்படி கல்முனை நகர லயன்ஸ் கழக முக்கியஸ்தர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.
அதிபர் செல்லையா பேரின்பராசா நிகழ்வில் நன்றி பகர்ந்து மேலும் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“லயன்ஸ் கழகங்கள் உலகளாவிய ரீதியில் பின் தங்கிய, வறிய மக்களுக்கான பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றன.
இதன் ஓர் அங்கமாகவே கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் சமூகப் பணிகளும் அமைந்துள்ளன.
இந்த வகையில் கல்முனை நகர லயன்ஸ் கழகம் தன்னலம் கருதாத சமூக சேவைகளை உயிர் மூச்சாகக் கொண்ட உறுப்பினர்களின் சிறந்த பங்களிப்புடன் இயங்கி வருகின்றது.
கழகத்தலைவர் லயன். சிவராசா, அவரது துணைவியார் லயன்லேடி சுகந்தி சிவராசா உட்பட கழகத்தின் சகல உறுப்பினர்களும் எத்தகைய எதிர்பார்ப்புகளுமின்றி, தார்மீகப் பணியாகக் கழக சேவைகளை முன்னெடுத்துவருவது பெரும் எடுத்துக்காட்டானதும், பாராட்டத்தக்கதுமாகும்.
தாராளமனப்பாங்குடன் அவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பணிகள் தெய்வீகப் பணி என்றால் மிகையாகாது” என்றார்.
பாடசாலை ஆசிரியை திருமதி கிருபா தேவி இராமலிங்கம் இறுதியில் நன்றியுரைபகர்ந்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House