யாழ் மத்திய கல்லூரியின் புலமைப்பரிசில்
யாழ் மத்திய கல்லூரியின் புலமைப்பரிசில்

யாழ் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர் நிதிப் பங்களிப்பு – உயர்தரக் கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு 1.68 மில்லியன் நிதியில் புலமைப்பரிசில்!

எஸ் தில்லைநாதன்

யாழ் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கம் வகையில் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது நிதிப்பங்களிப்புடன் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் குறித்த நிகழ்வில் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடரவுள்ள குறித்த மாணவர்களுக்காக தலா ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்காக சுமார் 1.68 மில்லியன் நிதி குறித்த 1987 ஆம் ஆண்டின் உயர்தர பிரிவு மாணவர்களால் பொன். விபுலானந்தன் ஞாபகார்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்குரிய இணைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரவியலாளருமான வித்தியானந்தநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தேசிய விளையாட்டுத்துறை பாடசாலையாக பரிணமித்துள்ள மத்திய கல்லூரியின் மாணவர்கள் இம்முறையும் சாதாரண தர பரீட்சையில் அதி சிறப்பு சித்திகளை பெற்று பாடசாலைக்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய கல்லூரியின் 1987 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் கல்விகற்ற மாணவர்கள் நிதி ஏற்பாடு செய்திருந்தமைக்கு அமைய இம்முறை பரீட்சையில் திறமை சித்திகளை பெற்று மிளிர்ந்த மாணவர்களுக்காக இந்த புலமைப்பரிச்ல் திட்டத்தை வழங்கவுள்ளதுடன் இந்த திட்டம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் இணைப்பாளர் வித்தியானந்தநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

26ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் நிகழ்வுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் >>>>>> Jaffna Central College GCSE (A/L) Scholarship Programme

யாழ் மத்திய கல்லூரியின் புலமைப்பரிசில்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House