
posted 16th January 2022
யாழ்ப்பாண குடாநாட்டில் மலேரியாத் தொற்றுக்கான ஏது நிலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு எடுத்தக்காட்டாக நான்காவது மலேரியா நோயாளியும் இனம் காணப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
என்று யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனாநந்தா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளிகள் இளவயதினராக இருப்பதுடன் வேலை வாய்ப்புகளுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயன்று திரும்பி வந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
வடபகுதி இளைஞர்களுக்கு இவ்வாறு பயண ஏற்பாடுகளை பிரான்ஸில் உள்ள பயணமுகவர்கள் செய்கின்றனர். இவர்கள் மூலம் வட பகுதியில் உள்ளவர்கள் விமானம் மூலம் கட்டாருக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து கானா, ஐஸ்வரிகோஸ்ட் நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்தநாடுகளில் சுமார் 2 மாதங்கள் தங்கி இருந்துள்ளனர். அங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பயணித்தவர்கள் எமது பிரதேசத்திற்கு திரும்பி வரும் போது மலேரியா தொற்றுடன் வருகின்றனர்.
எனவே, மலேரியா நோய் பரவலைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும். எமது சுற்றுச்சூழலை நுளம்பு பெருகாது பாதுகாக்க வேண்டும். காய்ச்சல் உடையவர்களுக்கு மலேரியா நோய்க் கிருமிகள் தாக்கி உடையதா என குருதிப்பரிசோதனை செய்தல் அவசியம். மேலும் மலேரியா அச்சமுள்ள நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்பவர்கள் அதற்குரிய தடுப்பு மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லல் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House