
posted 14th January 2022
கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் மாபெரும் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் என்.சங்கீத் தலைமையில், கல்முனை மாநகரின் பழைய பஸ்தரிப்பிடத்திறந்த வெளி அரங்கில் இந்த தைத்திருநாளாம் தைப்பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் ஆன்மீக அதிதிகளாக சர்வமதத்தலைவர்கள் கலந்து கொண்டதுடன், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் எம்.ஏ.டக்ளஸ் கலந்து கொண்டார்.
அத்துடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.வீ.ஜே.இரத்நாயக்க, கட்டளைத்தளபதி பிரிகேடியர் அபயகோன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,
பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி.ஹேரத், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எல்.புத்திக, கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.றபீக், டாக்டர்.புஸ்பலதா லோகநாதன் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.வசந்தி, மேஜர் சிறிசேன ஆகியோர் விசேட அதிதிகளாகவும் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் மங்களவாத்தியங்கள் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக் கொடி மற்றும் கொடிகள் ஏற்றப்பட்டதுடன், கல்முனை மாமாங்க வித்தியாலய மாணவியரின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.
மேலும் புதுப்பானைகளில் பொங்கல் பொங்கும் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த விழாவில், கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்சேனை சார்பில் வறிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
அதேவேளை பிரதம அதிதி அரசாங்க அதிபர் டக்ளசிற்கு தமிழ் இளைஞர்சேனை சார்பில் தலைவர் என்.சங்கீத், பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து, பொன்னாடைபோர்த்தி பெரும் கொளரவமளித்ததுடன் இதனைத் தொடர்ந்து சகல உறுப்பினர்களும் அரசாங்க அதிபருக்கு மலர் மாலைகள் அணிவித்து கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House