
posted 28th January 2022
தற்பொழுது மன்னார் தீவானது கனியவள மண் அகழ்வுக்கும் மற்றும் மின்வலு உற்பத்திக்கான காற்றாலைகள் அமைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுவதனால் இவ் வாழ் மீனவர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன் மன்னார் தீவு எதிர்காலத்தில் கடலுக்கு இரையாகும் நிலை உருவாகும் என்ற அச்சம் மன்னாரில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு மன்னார் மாவட்ட மக்களே விழித்தெழுவோம். ஓன்றிணைவோம் மன்னார் மாவட்டத்தை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நோட்டிஸ் மூலமும், பொது இடங்களில் பதாதைகள் தொங்கவிடப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட தாள்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மன்னார் தீவினுள் கனியவள மண் அகழ்வு தொடர்பாகவும் கனியவள என்ற பெயரில் மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்தும் திட்டத்தை வன்மையாக கண்டித்து எதிர்ப்போம். ஒரு பிடி மண்ணையேனும் மன்னார் தீவிலிருந்து எடுத்துச் செல்ல அனுமதியோம். எம் மண்ணை பாதுகாப்போம். கனியவள மண் எமக்கு வேண்டும்
மன்னார் நடுக்குடாவினுள் 36 தூண்கள் பொருத்தப்பட்டுள்ள உயர் மின்வலு உற்பத்திக் காற்றாடிகளால் மீன்பிடி இல்லாமல் போகின்றது. எமக்கு அபிவிருத்தி வேண்டும், காற்றாடி வேண்டாம். மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உயர் மின்வலு காற்றாடிகள் அமைப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு ஒன்றிணைவோம். எமது மக்களின் எதிர்கால சந்ததி வாழ வழி சமைப்போம்.
மன்னார் தொடங்கி தலைமன்னார் வரை ஏ14 வீதி அபிவிருத்தி தரமற்ற வீதி, பாதுகாப்புக்கான அரண்கள், கற்கள் அமைக்காது கண்துடைப்பு நாடகம் நடத்துவதை கண்டிப்போம். அபிவிருத்தி வேண்டும். ஆனால் அரைகுறை வேலைத்திட்டம் வேண்டாம்.
எண்ணெய் அகழ்வால் அழியப்போகும் எமது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைவோம் எமது மண்ணில் வாழும் குடும்பங்கள் நட்டாற்றில் நில்லாதபடி பாதுகாப்போம்.
போதைப் பொருள் கடத்தல் பாவனை எமது மாணவ சமூகம் உட்பட எதிர்கால இளையோர் அழிவுப்பாதையில் செல்லுகின்றனர். ஒட்டுமொத்தமாக எமது சமூகம் இறப்பின் விழிம்பில் தள்ளப்படுகின்றது
ஆகவே மன்னார் மக்களே இவ் விடயங்களில் விழிப்பணர்வுடன் செயல்படுங்கள் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House