
posted 31st January 2022
நிந்தவூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் பொது நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவிருக்கின்றது.
பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவந்த அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் பொது நூலகக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக இப்பிரதேசத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்களான கே. சுதாமதி, கே.எம்.எம். ஜாரிஸ் ஆகியோர் சபையின் மாதாந்தக் கூட்டமொன்றிலும் பொது நூலகத்தின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தவிசாளர் தாஹிர் எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக அட்டப்பள்ளம், சிங்காரபுரமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள சிறீ சித்திவிநாயகர் சனசமூக நிலைய கட்டிடம் புனரமைக்கப்பட்டு பொது நூலகமாகத்திறந்து வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி குறித்த புனரமைக்கப்பட்ட கட்டிடத்தில் பொது நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது.
தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நடைபெறவிருக்கும் இப்பொது நூலக திறப்பு விழாவில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆயைளார் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
திறப்பு விழாவின் போது அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம், ஜேர்மன் நட்புறவு பாடசாலை, அட்டப்பள்ளம் அஸ்-ஸஹீதா வித்தியாலயம் என்பவற்றைச் சேர்ந்த ஆண்டு ஒன்று மாணவர்களுக்கு பிரதேச சபையால் புத்தகப் பைகளும் வழங்கப்படவுள்ளதாக தவிசாளர் தாஹிர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B