பெரும் பங்களிப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக சுமார் நான்கு வருடங்கள் கடமையாற்றிய டாக்டர்.ஐ.எல்.எம். றிபாஸ், அர்ப்பணிப்புடனான அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். சேவை மனப்பாங்குமிகுந்த அவருக்கு மிகவும் பொருத்தமான பதவி உயர்வே கிடைத்துள்ளது”

இவ்வாறு திகாமடுள்ள மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் கூறினார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி, பதவி உயர்வுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள டாக்டர்.ஐ.எல்.எம். றிபாஸைப்பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரபினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு பொத்துவில் அறுகம்பை, ரொக்கோஸ் விடுதியில் நடைபெற்றது.

நிகழ்வில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் றிபாஸின் சேவைகளைப்பாராட்டி பொன்னாடைகள் போர்த்தியும், நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவம் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“தூரப் பிரதேசத்தில் தனியாக அமைந்துள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடந்த நான்கு வருடகாலமாக வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிவந்த டாக்டர். றிபாஸ், தமது சேவைக்காலத்தில், வைத்தியசாலை மூலம் எமது மக்களுக்கு சிறந்த வைத்திய சேவைகள் கிடைக்கப்பாடுபட்டார்.

இந்த வைத்தியசாலை முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டவேண்டுமெனும் இலக்குடன் சிறந்த ஒத்ழைப்பையும் நல்கிவந்தார்.

இன்று அவரது சேவை, மற்றும் ஆற்றல், திறன்கள், ஆளுமைகளுக்குக் கிடைத்த பயனே இன்றைய பொறுப்புடன் கூடிய பணிப்பாளர் பதவியாகும்.

இந்த வகையில் பொத்துவில் ஆதார வைத்தியசலையின் எதிர்கால அபிவிருத்திக்கு அவரது சேவை பெரிதும் கிடைக்கும்மென நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச். அப்துல் றகீம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். அப்துல் சமட், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரஜாப், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யூசுப் நியாஸ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பெரும் பங்களிப்பு

எ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House