
posted 31st January 2022
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் சென்ற வருடத்திற்கான பெருந்திருவிழா இன்று 1 ஆம் திகதி செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இப் பெரும் திருவிழா தொடர்ந்து 17 தினங்கள் நடைபெறவுள்ளது.
இப் பெருந் திருவிழாவில் சிறப்புத் திருவிழாக்களான வெண்ணைத் திருவிழா 9 ஆம் திகதி புதன்கிழமையும், துகில் திருவிழாவும் 10 ஆம் திகதி வியாழக்கிழமையும், பாம்புத் திருவிழா 11 ஆம் திகதி வெள்ளிக் கிழமையும், கம்பன் போர்த்திருவிழா 12 ஆம் திகதி சனிக்கிழமையும், வேட்டைத் திருவிழா 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், சப்பரத்திருவிழா 14 ஆம் திகதி திங்கள் கிழமையும், தேர் திருவிழா 15 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையும், சமுத்திரத் தீர்த்தத் திருவிழா 16 ஆம் திகதி புதன்கிழமையும், கேணித்திருவிழா 17 ஆம் திகதி வியாழக்கிழமையும் அன்று மாலை கொடியிறக்கமும் இடம் பெறுவுள்ளது.
கடந்த வருடம் (2021) புரட்டாதி மாதம் நடைபெறவேண்டிய பெருந்திருவிழா கடுமையான கொரோனாத் தொற்றுக் காரணமாக இவ்வருடம் பெப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B