
posted 31st January 2022
“கொவிட் திரிபு ஒமிக்ரோன் பரவல் மீண்டும் இக்கட்டான நிலைக்குத்தள்ளியுள்ளது. எனவே பூஸ்டர் தடுப்பூசி ஏற்றலுடன், சுகாதார பாதுகாப்பிலும் பொது மக்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.”
இவ்வாறு, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம். றிபாஸ் பொது மக்களைக் கொரியுள்ளார்.
கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட் பரவல் நிலை தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது மூன்றாவது கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் (பைஸர்) தடுப்பூசியை அவசியம் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதுடன் தற்போதய கொவிட் பிறழ்வு பரவலைத் தவிர்ப்பதற்கு சுகாதார பாதுகாப்பை உதாசீனம் செய்யாது.
கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்திள்ளார்.
தற்போதய நிலமைகள் தொடர்பில் பணிப்பாளர் டாக்டர். றிபாஸ் மேலும் விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்.
“இன்று மக்களின் அன்றாட வாழ்வியல் கொவிட் எனும் கொரோனா பரவல் எச்சரிக்கையுடனேயே அமைந்துள்ளது.
இந்த நிலையில், கொவிட் - 19 பிறழ்வு ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
கடந்த சில மாதகாலமாக நாடு கொவிட் பரவல் மரண வீதம் குறைந்து சுமுக நிலை நிலவிய போதிலும், மீண்டும் கொவிட் தடுப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
கொவிட் பிறழ்வான ஒமிக்ரோன் பரவல் நிலை தொடர்பில் நாம் அசமந்தமாக இருந்துவிட முடியாது. இந்த அரக்கன் தலையெடுக்காமல் மிக அவதானம் கொள்ள வேண்டியுள்ளது.
இதனை நாம்புறக்கணித்தால் அதன் தாக்கம் எவ்வாறு அமையுமென பெரும் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது.
நாட்டில் கொவிட் - 19 பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான முதலாம், இரண்டாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காட்டிய ஆர்வம் காரணமாக, தடுப்பூசி ஏற்றலில், உலகில் 6 ஆவது இடத்தை இலங்கை பெற்றது.
ஆனால் 3 ஆவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில், நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி, நமது கல்முனைப் பிராந்தியத்திலும் பெரும்பின்னடைவே காணப்படுகின்றது.
எனவே பிழையான தகவல்களைக் கவனம் கொள்ளாது இன்று ஏற்பட்டுள்ள இக்ககட்டான நிலமையிலிருந்து பாதுகாப்புப் பெற பூஸ்டர் தடுப்பூசியை எவ்வித தயக்கமுமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதே வேளை சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B