
posted 1st January 2022

நாம் எமது தேனாரம் இணையத் தளத்திலிருந்து வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இப்புதிய ஆண்டு, உங்கள் வாழ்வில் சந்தோஷங்களையும், வெற்றிகளையும் நிறையத்தரும் வருடமாக அமைய எமது வாழ்த்துகள்!
மேலும், எமது இணையத்தளத்திற்காக பலவித இன்னல்கள் மத்தியில், அயராது உழைத்துவரும் எமது செய்தி நிருபர்களுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகளைளையும், நன்றிகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
கடந்த ஆண்டு (2021) பலவிதமான கசப்பு ஆண்டாகவும், கவலைகள் நிறைந்ததாகவும், இழப்புகளைச் சந்தித்ததாகவும், இன்னல்கள், இடையூறுகளைச் சந்தித்த வருடமாகவும் இருப்பினும், அவ்வாண்டை துணிச்சலுடன் முகம் கொடுத்து, போராடி இப்போது நிமிர்ந்து நிற்கின்றோம். இவ்வாறாக எத்தனையோ இழப்புகளையும், துயரங்களையும், துரோகங்களையும் வென்றெடுத்து, வீழாமல் இருக்கும் நமக்கு இவையெல்லாம் புதியன அல்லவே.
இரண்டாயிரம் நாட்களை நோக்கி, பாதைகளைக் கையிலேந்தி வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளை நம்மிடம் தாருங்கள் என்று இரந்து கேட்கும் உறவுகளின் ஏக்கம் கொஞ்சமாவது ஈரமாக்காத உள்ளங்களின் மத்தியிலும், விடியல் வருமா என்று வழியினை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் எமது கண்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமென்று காலடி எடுத்து வைத்திருக்கின்றோம் இப்புதிய ஆண்டில்.
சொந்த மண்ணில் நிலைகொள்ள முடியாமல் அயல் நாட்டில் அகதிகளாகி, அவதிப்படும் வாழ்க்கையை, உயிரையாவது காப்போமென துயரங்களை மெண்டு விழுங்கி வாழும் நாம், இலவு காத்த கிளியாக இல்லாமல் சதந்திர ஜீவன்களாக வாழ்வு வருமென்ற நம்பிக்கையுடன் நம் பாதம் பதித்துள்ளோம் இப் புதிய ஆண்டில்.
நம்பிக்கையுடன் வாழ்வோம். இவ்வளவு நாளும் காத்த தெய்வம் இவ்வாண்டிலும் காத்து நல்வாழ்வு தருமென நம்புவோம். வாழ்வைத் தொடருவோம். வளம்பெற எமது வாழ்த்துகள்.
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House