
posted 4th January 2022
'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை (04) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு.சுனந்த காரியப்பெரும மற்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் திரு.சுமன் ஹதராகம ஆகியோருக்கிடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சம்புத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளை தியாகம் செய்யும் 25-59 வயதிற்குட்பட்ட பிக்குமார்கள் மற்றும் பிக்குனிமார்களின் பெற்றோருக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த விசேட ஓய்வூதிய திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
சமூக பாதுகாப்பு சபையின் கீழ் பலன்களை செலுத்தும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கமைய பங்களிப்பாளர்கள் மற்றும் பல்வேறு பரோபகாரர்களின் தேவைகளைப் பொறுத்து, 60 வயதின் பின்னர் கிடைக்கும் வகையில் வேண்டிய தொகையில் ஓய்வூதிய திட்டமிடக் கூடியமை இதன் விசேடம்சமாகும்.
2022 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் ஏனைய பணியாளர்களால் வரவேற்கப்பட்டதுடன், பிரித் பாராயண நிகழ்வும் சர்வமத ஆசீர்வாத பூஜையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வகிபாகம் குறித்த சுருக்கமான முன்னேற்ற அறிக்கை, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களினால் கௌரவ பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விகாரைகளினதும் கழிவறை வசதிகளை ஆராய்ந்து, அந்த வசதிகள் முறையாக இல்லாத விகாரைகளுக்கு, அந்த வசதிகளை முறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது அமைச்சு அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.
கலாநிதி வணக்கத்திற்குரிய இத்ததெதமலியே இந்தசர தேரர், கலகம தம்மரங்சி தேரர், கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் மற்றும் கலாநிதி இராமசந்திர ஐயர் வீரபாண்டியன் ஐயர் குருக்கள், அல்ஹாஜ் ஹசன் மௌலானா மௌலவி, கலாநிதி அருட்தந்தை சிக்ஸ்டஸ் நிகலஸ் பெர்னாண்டோ குருகுலசூரிய உள்ளிட்ட சர்வத மதத்தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசீர்வதித்திருந்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் சமய அலுவல்கள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.ரத்நாயக்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே, தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜித் பாலசந்திர, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House