பல்வகைச் செய்தித்துணுக்குகள்

வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்

வடமராட்சி துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை(10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது- 27) என்பவரே கைப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட மூன்று கட்சிகள்

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த மூன்று கட்சிகளை அங்கீகரித்து பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய லங்கா சுதந்திர கட்சி என்ற கட்சியும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரொனாத் தொற்றும் மரணமும் அப்டேற் (12.01.2022)

கொரோனா தொற்றால் இலங்கையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 18 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரப் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, 30 - 59 வயது பிரிவில் 5 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் என 13 பேருமாக 18 பேர் உயிரிழந்தனர்.

இதனால், நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 83ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை (09) மட்டும் 15 பேர் உயிரிழந்தனர் என்று திங்கட்கிழமை (10) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 134 ஆக உயர்வடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (09) மரணித்தவர்களில் 8 ஆண்களும் 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 9 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.

கரையொதுங்கிய மீனவர் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவானால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, நேற்று (11) மாலை சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ். இளவாலை, குசுமந்துறை பகுதியை சேர்ந்த 35 வயதான மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பல்வகைச் செய்தித்துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House