"நீதிக்கான அணுகல்"  - பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு

நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் "நீதிக்கான அணுகல்" செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (30) காலை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், பிரதமரின் இணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சின் செயலாளர் பி.கே. மாயாதுன்ன, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சமூகத்தின் கேள்விகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் பி.கே. மாயாதுன்ன ஆகியோர் பதிலளித்தனர்.

"நீதிக்கான அணுகல்"  - பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House