நினைவு முத்திரை வெளியீடு
நினைவு முத்திரை வெளியீடு

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலின் (நாகூர் ஆண்டகை தர்கா) 200 ஆவது கொடியேற்று விழாவையொட்டி இன்று வியாழக்கிழமை (06) இலங்கை தபால் திணைக்கள முத்திரை பணியகத்தினால் ஞாபகர்த்த முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பெருமுயற்சியால் வெளியிடப்பட்டுள்ள இக் கொடியேற்று விழா ஞாபகர்த்த முத்திரை இன்று மேற்படி கல்முனை நாகூர் ஆண்டகை கொடியேற்று பள்ளிவாசலில் வைத்து வெளியிடப்பட்டது.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபைத் தலைவர் டாக்டர். ஏ.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரத அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கழந்து கொண்டதுடன், தபால் திணைக்கள முத்திரை வெளியீட்டுப் பணியக உயர் அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நினைவு முத்திரையை அமைச்சர் டளஸ் அழகப்பெரும சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

நிகழ்வின் முக்கிய காரண கர்தாவான நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உரையாற்றுகையில் குறித்த கடற்கரைப்பள்ளிவாசல் வளாகத்தை புனித பூமியாக அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு அமைச்சரும் சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கோரியதுடன் இந்த நினைவு முத்திரை வெளியீட்டிற்கு ஆவண செய்த அமைச்சர் டளஸ் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியேருடன் இந்த பள்ளிவாசல் வளாகத்தை புனித பூமியாக எதிர்காலத்தில் பிரகடனப்படுத்துவது தொடர்பில் தனது சிபாரிசை அளிப்பதுடன் அதற்கான ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந் நிகழ்வில் முத்திரை வெளியீடு தொடர்பான சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டதுடன் பிரதம அதிதியான அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடைகள் போர்த்தியும் கௌரவம் அளிக்கப்பட்டது.

நினைவு முத்திரை வெளியீடு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House