தொண்டர் ஆசிரியர்களின்  கவனவீர்ப்பு நடவடிக்கை
தொண்டர் ஆசிரியர்களின்  கவனவீர்ப்பு நடவடிக்கை

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் கவனவீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில்;

நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

போரால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி அமைச்சினால் கல்வி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் 60 தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளார்கள் என்றும் அவர்களது நியமனம் தொடர்பாக ஆராயுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் 210 தொண்டர் ஆசிரியர்கள் உள்ளோம். 60 தொண்டர் ஆசிரியர்கள் என அந்தக் கடிதத்தில் எவ்வாறு வந்துள்ளது என எமது வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தை வினவியபோது, அவர்கள் தமக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.

நாங்கள் இது தொடர்பாக அமைச்சை வினவியபோது, வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய பெயர் விவரங்களின் அடிப்படையிலேயே தாங்கள் குறித்த கடிதத்தை அனுப்பியதாக தெரிவிக்கின்றனர்.

மிகுதி 110 பேரின் பெயர்களும் அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என நாங்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

எனவே உரிய அதிகாரிகள் எமது நிலையை கருத்தில் கொண்டு எமக்கான நியமனத்திற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றார்.

தொண்டர் ஆசிரியர்களின்  கவனவீர்ப்பு நடவடிக்கை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House