
posted 27th January 2022

தகவல்
தமிழருக்கு எத்தகைய அரசியல் தீர்வும் வழங்குவதில்லை, அவர்களுக்கு எத்தகைய அதிகாரப்பகிர்வும் வழங்குவதில்லை என்பதான் சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் முடிவாகும்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வெற்றியின் பின்னான இராணுவ-- பொலிஸ் மேலாண்மையின் பின்னணியில், தமிழ் தேசிய இனத்தை தாயக மண்ணழிப்பு ரீதியாகவும் அரசியல் நிர்வாக ரீதியாகவும் முற்றாக அழித்தொழிக்க கூடிய வல்லமையுடன் சிங்கள அரசு இருக்கும் நிலையில் அதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் முட்டுக் கட்டையாக உள்ளதாக எண்ணி அதனை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென சிங்கள ஆட்சியாளர்கள் முயல்கின்றனர்.
13 ஆவது திருத்தச்சட்டம் வெளிநாட்டு தலையுடன் கூடியது என்ற வகையில், அது ஐநா வரை சர்வதேச பரிமாணம் பெற்றுள்ள ஒரு அரசியல் யாப்பு விதியா உள்ள நிலையில் , அதனை வைத்துக்கொண்டு முழு அளவிலான தமிழின அழிப்பை செய்வது சற்று கடினம். சிங்கள ஆட்சியாளர்களின் முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு தடைக்கல்லாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு முறையை உலக அரங்கில் சட்டரீதியாக நியாயப்படுத்த இது ஏதுவாக உள்ளதால் 13வது திருத்தச் சட்டத்தை நீக்க ராஜபக்சக்களின் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
ராஜபக்சக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான சிங்கள பௌத்த மக்களின் ஆணையை கோரி அதில் வெற்றி பெற்றுள்னர்.
அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் ஆதரவு கிடைதால் 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான நியாயத்தை இலகுவாக்கலாம். அதற்காக தமிழ் மக்கள் மத்தியில் 13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டி, தம் திட்டத்தை நிறைவேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியை கோத்தபாய துணைக்கிழுத்து திரைமறைவில் கஜேந்திரகுமாருடன் இணைந்து திட்டமிட்டுள்ளது.
தனது பேரன் பொன்னம்பலம் கால பரம்பரை சொத்தை பாதுகாப்பதற்காகவும், தெற்கில் உள்ள தமது சொத்துக்களையும் முதலீடுகளையும் பாதுகாப்பதற்காகவும், இத்தகைய தமிழின அழிப்பு பஞ்சமாபாதகத்திற்கு கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் துணை போகின்றனர். கஜேந்திரகுமாரின் இந்த கள்ள உடன்பாட்டை புரிந்துகொள்ளாமல் தமிழ் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு பலியாகின்றனர்.
13வது திருத்தம் என்பது எந்த ஒரு அரசாலும் தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடையல்ல. அது ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் போராடிய ஒரு நீண்ட தியாகத்தின் ஒரு வெளிப்பாடு. அதனை சிங்கள ஆட்சியாளர்களோ , சிங்கள தலைவர்களோ உண்மையில் ஒருபோதும் விரும்பவில்லை.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் இவ்வாண்டுக்கான கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்தின் கட்டுரையில் "" தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எதுவும் தேவையில்லை என்றும், அதனைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும், அவர்களுக்கு தேவைப்படுவது பொருளாதார அபிவிருத்திதான் என்றும் அதற்கான பொருளாதார அபிவிருத்தியை அரசாங்கம் இவ்வாண்டு முன்னெடுக்கும்"" என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இவ்வாறு அவர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முற்றாக நிராகரித்து செயற்படும் நிலையில் அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் அதற்கு ஒரு முட்டுக்கட்டையாக விளங்குவதை அவரால் சகிக்க முடியவில்லை. எனவே 13வது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு கோரும் ஒரு கோரிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எழச்செய்ய வேண்டிய அவசியம் கோத்தபாயவுக்கு உண்டு. அதனை அவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்துடனான திரைமறைவு ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்றுகிறார் என்பதை அவரது தொண்டர்களும் தமிழ் மக்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கொள்ளைக்காரன் வெள்ளை உடுப்புடன் வீட்டுக்கு வேவுபார்க்கச் செல்வது போல கஜேந்திரகுமார் சுத்த பூனையாய் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடுகிறார். இது மிகவும் ஆபத்தான போக்கு. இத்தகைய போக்கினை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.
13ஆவது திருத்தம் மக்களுக்கு போதாதென்பது உண்மை. சமஸ்டி முறைக்கு குறையாக தீர்வு வேண்டும் என்பதும் அவசியம். இந்நிலையில் தமிழருக்கான எதனையும் மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களின் முன் இனவாத பேட்டைக்கு எதிராக குறைந்தபட்சம் தடைக் கல்லாக இருக்கும் 13ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கோருவது முற்றிலும் மடமைத்தனமானதும் எதிரிக்கு துணைபோகும் செயலுமேயாகும்.
அரசியல் சட்டரீதியாக சர்வதேச அங்கீகாரம் கொண்ட 13ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டால் பின்பு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான ஒரு அரசியல் தீர்வையும் சிங்கள ஆட்சியாளர் ஒருபோதும் தரமாட்டார்கள். ஆயுதப் போராட்டத்தால் , அந்த நெருக்கடியின் மத்தியில் சிங்கள அரசு அப்போது உருவாக்க தயாராக இருந்த இத்தகைய ஒரு சர்வதேச பரிமாணஙகொண்ட சட்டத்தை முதலில் நீக்கிவிட்டு இனிமேல் எந்த தமிழ் தலைவர்களாலும் உள்நாட்டுரீதியாக போராடி ஒரு மாவட்ட சபையைகூட ஒருபோதும் பெறமுடியாது. எனவே இருக்கும் 13ஆவது திருத்தத்தை நீக்குமாறு கோருவது சிங்கள ஆட்சியாளர்களின் தேவையையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கான செயலேயாகும்.
""வானத்தில் பறக்கும் பறவையைப் பிடிப்பதற்காக கையிலிருக்கும் பறவையை கைவிடக்கூடாது"" என்றொரு பழமொழி உண்டு.
இங்கு சிங்கள அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு 13ஆவதை நீக்குமாறு கோராமல் தமிழ் மக்களுக்கான சமஸ்டி முறையிலான தீர்வு வேண்டும் என்று தீவிரமாகப் போராட வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு.
இந்தப் 13 ஆவது திருத்தத்தை நீக்காது அதன் தொடர்ச்சியாக 13ஆவது திருத்தத்தை மேற்கோள் காட்டி, அரசியல் யாப்பில் சமஸ்டி முறையிலான தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்று போராட வேண்டும். அவ்வாறு சமஸ்டி முறையிலான தீர்வு வந்தவுடன் 13வது திருத்தத்திற்கான தேவை இல்லாது போய்விடுகிறது.
எனவே தமிழின அழிப்புக்கு ஏதுவான வகையில் சிங்கள இனவாதத்தின் தேவைக்காக 13ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என்று கோருவதை விடுத்து சமஸ்டி முறையிலான தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக முன்வைத்து இதயசுத்தியுடன் சாத்வீகப் போராட்டங்களை பலமாக முன்னெடுக்க வேண்டும் .
எதிரிக்கு சேவை செய்யும் வகையிலும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலும் பம்மாத்து போராட்டங்களை முன்னெடுக்காது விடுதலைக்காக போராடி தியாகம் செய்த தியாகிகளின் பெயரால் இதயசுத்தியுடன் தலைவர்கள் முன்நின்று பலமான சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்பாவிகளின் வெளிநாட்டுப் பணத்தை அள்ளியிறைத்து வாகனங்களில் ஆட்களை ஏற்றியிறக்கும்
விலைபோகும் பேர்வழிகளும் துரோகிகளும் இப்படி உண்மையான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு ஒரு போதும் முன்வரமாட்டார்கள் என்பது திண்ணம்.
-தி.துருசுமன்னன்

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House